Asianet News TamilAsianet News Tamil

ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Annamalai letter requesting time for BJP team to meet Chief Minister Stalin
Author
First Published Jul 10, 2023, 10:18 PM IST | Last Updated Jul 10, 2023, 10:18 PM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு நாகராஜன், வி பி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்திகாயணி, உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து,  அறிக்கை அளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

Annamalai letter requesting time for BJP team to meet Chief Minister Stalin

இதுதொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

ஆகவே, தாங்கள், வருகின்ற ஜூலை 11ம் தேதி முதல் 13ம் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்புக்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களது மேலான பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இப்படியா.! இறந்த நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios