- Home
- இந்தியா
- கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Latest Crime News: ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷேக் அகமதை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கள்ளக்காதல் விவகாரத்தில் நடக்கும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் கிராந்தி(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கிராந்தி வீட்டில் பழுதாகி கிடந்த ஏசியை சரி செய்ய ஷேக் அகமத்(27) வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு ஆசைவார்த்தை கூறியதை அடுத்து கணவரை சட்டப்படி பிரிந்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் கிராந்தி ஏற்கனவே திருமணமானவர் என்பதாலும் ஷேக் அகமதுவின் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்த போதிலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஷேக் அகமது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார்.
அவ்வப்போது கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஷேக் அகமத் மற்றும் கிராந்திக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராந்தி ஷேக் அகமத்தை வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷேக் அகமதை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கிராந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

