MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.! ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.! ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Nilgiri Mountain Railway: கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய மற்றொரு விஷயம் என்றால் அது ஊட்டி மலை ரயில் பயணம். 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 21 2026, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 சுற்றுலா பயணிகள்
Image Credit : Getty

சுற்றுலா பயணிகள்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி இந்தியாவின் மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. அழகிய மலைகள், நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் குளிர்ச்சியான காலநிலை, பனிபோர்வை போன்ற புல்வெளிகள், ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

25
மலை ரயில் சேவை
Image Credit : Getty

மலை ரயில் சேவை

கோடை விடுமுறை மட்டுமின்றி, தொடர் விடுமுறைகள், பண்டிகை காலங்கள் என்றாலே பலரின் நினைவுக்கு வருது ஊட்டியாகும். கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய மற்றொரு விஷயம் என்றால் அது ஊட்டி மலை ரயில் பயணம். ஊட்டிக்கு செல்பவர்கள் ஒருமுறையாவது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயற்கை அழகை ரசித்த படி செல்வதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் மலை ரயில் சேவையை தேர்வு செய்கின்றனர்.

Related Articles

Related image1
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?
Related image2
சனிக்கிழமையான இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான லிஸ்ட்!
35
தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
Image Credit : instagram

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

இந்​நிலை​யில், நீலகிரி மலை ரயில் நஷ்டத்​தில் இயங்​கிய​தால் 2020-ல் ரயில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​ட நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பிரபல​மான நீலகிரி மலை ரயில் சேவை 1899-ல் தொடங்​கப்​பட்​டது. 2005-ல் யுனெஸ்​கோ​வால் இது உலகப் பாரம்​பரிய தளமாக சேர்க்​கப்​பட்​டது. தற்​போது, நீலகிரி மலை ரயில் பாதை​யில் 3 வகை​யான ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. ஒரு நாளைக்கு 8 பயணங்​கள், கோடை மற்​றும் பிற விடு​முறை நாட்​கள், வார இறுதி நாட்​கள், திரு​விழாக்​களின் போது சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

45
ரயில் பிரி​வில் சரக்கு கட்​ட​ணம்
Image Credit : instagram

ரயில் பிரி​வில் சரக்கு கட்​ட​ணம்

நீலகிரி மலை ரயில் பிரி​வில் சரக்கு கட்​ட​ணம் கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. மேட்​டுப்​பாளை​யம் - குன்​னூர் இடையே சரக்கு கட்​ட​ணம் 204% அதி​கரித்துள்​ளது. கூடு​தலாக, பிற செயல்​பாடு​கள், பராமரிப்பு செல​வு​கள் மற்​றும் ஊழியர்​களின் செல​வு​களும்   கணிச​மாக அதி​கரித்​துள்​ளன. இருப்​பினும், வழக்​க​மான ரயில்​களுக்​கான டிக்​கெட் கட்​ட​ணம் கடந்த 2020-ம் ஆண்டு முதல் மாற்றியமைக்​கப்​பட​வில்​லை.

55
ரயில் கட்டண உயர்வு விவரம்
Image Credit : Pixabay

ரயில் கட்டண உயர்வு விவரம்

இதனால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை நிர்​வகிக்க இன்று முதல் வழக்​க​மான ரயில்​களின் அடிப்​படைக் கட்​ட​ணம் 5 சதவீதம் அதி​கரிக்​கப்​படு​கிறது. முதல் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ.520லிருந்து ரூ.550ஆகவும், முன்பதிவு முதல் வகுப்பு ரூ.600லிருந்து ரூ.630ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?
Recommended image2
சனிக்கிழமையான இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான லிஸ்ட்!
Recommended image3
பிப்ரவரி 23ம் தேதி திங்கள் கிழமை 5 முதல் 8 மணிநேரம் மின்தடை.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related Stories
Recommended image1
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?
Recommended image2
சனிக்கிழமையான இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்.! வெளியான லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved