சிவகாசியில் கதறி அழுதபடி அண்ணாமலையின் காலில் விழுந்த மூதாட்டி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் போது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மூதாட்டி ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்து உதவி செய்யுமாறு கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

Share this Video

என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபயணமாக சென்ற அண்ணாமலையிடம் 76 வயது மூதாட்டி ஒருவர் கதறி அழுதுகொண்டே அவரது கைகளை பற்றிக் கொண்டு முதியோர் உதவித் தொகை ரூ.1000 மட்டுமே எனக்கு கிடைக்கிறது. 

அந்த பணத்தை வைத்து தான் வாழ்ந்து வருகிறேன். பொருளாதார ரீதியாக எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபடி காலில் விழுந்தார். உடனடியாக அவரை தாங்கி பிடித்துக் கொண்ட அண்ணாமலை கண்டிப்பாக உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

Related Video