Asianet News TamilAsianet News Tamil

மிசா சட்டத்திற்கும் வருமான வரி சோதனைக்கும் வேறுபாடு இல்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

காங்கிரஸ் கொண்டு வந்த மிசா சட்டத்திற்கும், மத்திய பாஜக அரசு தற்போது நடத்தும் வருமான வரி துறை சோதனைக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா  என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திருச்சியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 30) தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

“50 வருட உழைப்பை இந்த கண்காட்சியில் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் இந்த கண்காட்சியை பார்க்கும்போது வெவ்வேறு அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறது. இந்த கண்காட்சியை இதுவரை 9 லட்சம் மக்கள் பார்த்து உள்ளனர். காங்கிரஸ் கொண்டு வந்த மிசா சட்டத்திற்கும், மத்திய பாஜக அரசு தற்போது நடத்தும் வருமான வரி துறை சோதனைக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்கிற கேள்விக்கு ?,  வேறுபாடுகள் ஏதும் இல்லை. 

வருமானவரித்துறை சோதனை போன்ற எந்த சவாலாக இருந்தாலும் நாங்கள் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்  என்று கூறினார். சட்டப்பேரவை முடிந்து ஏறத்தாழ ஒரு வாரம் மட்டுமே ஆகிறது படிப்படியாக எனது பணிகளை துவங்க உள்ளேன். தமிழக அமைச்சரவை இலாகாக்கள் மாற்றப்படுவதாக தகவல் வருகிறது குறிப்பாக நீங்கள் துணை முதல்வராக  பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்கிற கேள்விக்கு, எங்கிருந்து தகவல்கள் வந்தது என்று கூறினார்.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!

இதையும் படிங்க..மெரினாவில் பேனா நினைவு சின்னம்: சட்ட போராட்டத்தை அறிவித்த சீமான்.. அதிர்ச்சியில் திமுக.!!

Video Top Stories