Asianet News TamilAsianet News Tamil

மெரினாவில் பேனா நினைவு சின்னம்: சட்ட போராட்டத்தை அறிவித்த சீமான்.. அதிர்ச்சியில் திமுக.!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Seeman Protest Against Karunanidhi Pen Memorial at Marina
Author
First Published Apr 29, 2023, 11:07 AM IST

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. 

இப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Seeman Protest Against Karunanidhi Pen Memorial at Marina

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும், மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதியை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து கூறிய அவர், “கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!

இதையும் படிங்க..2050ல் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.. அப்போ காவேரி ஆறு என்னவாகும்? அதிர்ச்சி தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios