மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருச்சி அருகே மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசை கண்டித்து திருச்சி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாணவர் சங்க அமைப்பினர் மறியல் போராட்டதில் ஈடுபட்டனர்.

Share this Video

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பை தெரிவிப்பதோடு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் தனலட்சுமி கல்லூரி முன்பு திருச்சி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சூர்யா தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியைச் சேர்ந்த மாணவன, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் திருவெறும்பூர் காவல் துறையினர் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

இதனால் சிறிது நேரம் திருச்சி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Video