மேட்டூரில் கூடுதல் தண்ணீர் திறப்பு.. கல்லணையில் அடித்து செல்லப்பட்ட 16 மாடுகள் - வைரல் வீடியோ
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அங்கு திறக்கப்படும் தண்ணீருடன் பவானிசாகர் மற்றும் அமராவதி ஆறுகளில் வரும் தண்ணீரும் ஈரோடு மற்றும் கரூரில் காவிரியில் ஐக்கியமாகி மாயனூர் கதவனை வாயிலாக முக்கொம்பு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் முக்கொம்பு மேலணைக்கு அதிக வசமாக ஒரு லட்சத்து 37 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்னர் நள்ளிரவு படிப்படியாக உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 69 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும் 500 கன அடி நீர் பாசன வாய்க்கால்களிலும் மீதமுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது.
சுமார் இரண்டு லட்சம் கனஅடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் செல்வதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் திருச்சியில் இருந்து கல்லணைக்கு செல்லும் உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கியது. கொள்ளிடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கவுதாசநல்லூர், கிளிக்கூடு பகுதியில் உள்ள 200 ஏக்கரில் வாழை பயிர்கள் மூழ்கியது.
நேற்று மதியம் கல்லணையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த 16 மாடுகள் வெள்ள நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டது. இந்த மாடுகள் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் மதகு பகுதிக்கு வந்தது. அப்போது மாடுகள் எதிர்நீச்சல் போட்டு செல்ல முயன்றாலும் தண்ணீரின் வேகத்தால் மாடுகள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்