சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்
அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.
இபிஎஸ் Vs ஓபிஎஸ் :
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எப்படி உட்கட்சி குழப்பம் ஏற்பட்டதோ, அதேபோல மீண்டும் இப்போது உட்கட்சி குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதிமுக பிளவுபட்டு இப்போது இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று அக்கட்சியே பிளவுபட்டு இருக்கிறது.
அதிமுக ஒரே தலைமையின் கீழ் இயங்கினால் தான், சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடியும் என்றும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூற தொடங்கினர். பிறகு பல்வேறு சண்டைகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.
இதையும் படிங்க..சிறுவனின் உயிரை பறித்த குளிர்பானம்.. ஆசிட் கலந்த குளிர்பானத்தால் நேர்ந்த விபரீத சம்பவம்
அதிமுக தலைமை :
இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருத தரப்பும் எதிர் தரப்பினரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக மாறி மாறி அறிவித்தனர். அப்போது முதலே இரு தரப்பும் தனித்தே இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியினை சேர்ந்த சீனியர்கள் சிலர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே கட்சிக்கு நல்லது என்றும் கூறி வருகிறார்கள்.
இருப்பினும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது நேரடியாகவே தெரிகிறது. இருதரப்பும் பதவிக்கு போட்டு போடுவது நல்லதல்ல என்றும் கருதுகிறார்கள். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் அன்னவர்ராஜா.
சசிகலா :
அவர் பேசிய போது, ‘ அதிமுகவில் நான்கு அணிகளும் ஒன்றாக இணைந்தால் தான் அதிமுக வெல்ல முடியும். எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கும் தகுதி சின்னம்மா ஒருவருக்கு தான் இருக்கிறது. தன்னை எவ்வளவு புண்படும்படி பேசிய தலைவர்களை கூட சின்னம்மா இதுவரை அவர்களுக்கு எதிராக எந்த கருத்தையும் சொன்னதில்லை.யாருடைய மனம் புண்படும்படியும் அவர் பேசியது இல்லை.
இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!
அதிமுகவில் பிளவு :
அந்த பண்பு சின்னம்மாவாகிய சசிகலாவுக்கு தான் இருக்கிறது. எனவே அவருக்கு தான் அதிமுக கட்சியை தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறது. சின்னம்மா சாதியை, இனத்தை பார்க்க மாட்டார். அவருடைய ஜாதியை சேர்ந்தவர்களுக்கா பதவி கொடுத்தார் ? ஜாதி, இனம் பார்க்காமல் பதவி கொடுத்தவர் சின்னம்மா.
அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேர வேண்டும். கட்சிக்கு சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும், இபிஎஸ் பதவிக்கு ஆபத்து வரும் சமயங்களில் ஓபிஎஸ்யை இணைத்துக் கொள்வார். நான் ஓபிஎஸ், இபிஎஸ் எந்த அணியையும் சேர்ந்தவர் நான் அல்ல, அண்ணா திமுககாரன் என்று கூறினார்.
இதையும் படிங்க..ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா.. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் உக்ரைன் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!