மதுரைக்குச் சர்வதேச அந்தஸ்து கிடைப்பதன் மூலம் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மல்லிகைப்பூ ஏற்றுமதி முதல் ஜவுளித் தொழில் வரை தென் மாவட்டங்களின் உற்பத்திப் பொருட்கள் நேரடியாக உலகச் சந்தைக்குச் செல்லும்.

தென் தமிழக மக்களின் பல தசாப்த கால கனவு ஒருவழியாக நனவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வரவேற்று, தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் கலாச்சார மையமாகவும், தென் தமிழகத்திற்கான முக்கிய இணைப்பாகவும் விளங்கும் மதுரை மண்ணின் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மதுரைக்குச் சர்வதேச அந்தஸ்து கிடைப்பதன் மூலம் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மல்லிகைப்பூ ஏற்றுமதி முதல் ஜவுளித் தொழில் வரை தென் மாவட்டங்களின் உற்பத்திப் பொருட்கள் நேரடியாக உலகச் சந்தைக்குச் செல்லும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரச் சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். விமான நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய விமான நிறுவனங்களின் வருகையால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

தமிழக நலன் சார்ந்த இந்த முக்கிய அறிவிப்பிற்கு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்தள பதிவில், '' மதுரை விமான நிலையத்திற்கு "சர்வதேச விமான நிலையம்" அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முடிவை அதிமுக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் கலாச்சார மையமாகவும், தென் தமிழகத்திற்கான முக்கிய இணைப்பாக விளங்கும் மதுரை மண்ணின் மக்கள் விடுத்த நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை கொடுத்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும்'' எனத் தெரிவித்துள்ளார்.