திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி… 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் சுமார்  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். 

First Published Apr 16, 2023, 7:49 PM IST | Last Updated Apr 16, 2023, 7:49 PM IST

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் சுமார்  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடக்க காலத்திலிருந்தே விஜயதசமியை ஒட்டி சீருடை அணிவகுப்புப் பேரணி நடத்துவது வழக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சீருடைப் பேரணி வருடாந்திர நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இந்த பேரணிக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் அனுமதி அளித்து வந்து நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து ஆர்எஸ்எஸ் பேரணி விளையாட்டு மைதானங்களில் நடத்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க:  மீனாட்சியம்மன் கோயில் யானை உடல்நிலை எப்படி இருக்கிறது? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்தவெளியில் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.

இதையும் படிங்க: தங்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு… மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசியர் அதிரடி!!

அந்த வகையில், திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சிலை முன்பு ஆர்.எஸ்.எஸ் பேரணி உறுதிமொழியுடன் தொடங்கியது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்துக்கொண்டு, அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் மாட விதிகளை சுற்றி ஊர்வலமாக சென்று காந்தி சிலை அருகே நிறைவு செய்தனர். ஆர்.எஸ்.எஸ் பேரணியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

Video Top Stories