Watch : மீனாட்சியம்மன் கோயில் யானை உடல்நிலை எப்படி இருக்கிறது? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.

First Published Apr 16, 2023, 3:00 PM IST | Last Updated Apr 16, 2023, 3:01 PM IST

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில் 23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட குளியல் தொட்டியினை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். குளத்தில் யானை உற்சாகமாக ஓடி ஆடி மகிழ்ந்து உற்சாகமாக விளையாடியது.

பின்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு ஏற்பட்ட கண் பிரச்சனை மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

தொடர்ச்சியாக யானை சிமெண்ட் தரையில் நிற்பதால் அதன் எலும்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனை தீர்க்கும் விதமாக மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பார்வதி யானை ஆனந்தமாக விளையாடியதை நீங்கள் அனைவரும் பார்த்து உள்ளீர்கள்.

இதன் மூலம் யானை பார்வதிக்கு எலும்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும் மேலும் உடலில் ஏற்பட்ட புண்கள் அதற்கான மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

யானைக்கு கண் அறுவை சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சைக்கு பின்பாக யானையை பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் மருந்துகள் கொடுத்து கண் பிரச்சனை மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Video Top Stories