ஏழைகளின் உயிரில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி? அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாகவும், தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக ஆண்கள் உள்நோயாளிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவருக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.