அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்; திடீரென குறுக்கே வந்த லாரியால் பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்

சேலத்தில் திடீரென குறுக்கே வந்த லாரி மீது அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

First Published Nov 20, 2023, 5:05 PM IST | Last Updated Nov 20, 2023, 5:05 PM IST

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தை தடம், பண்ணப்பட்டி அருகே சரக்கு வாகனம் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனுஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories