Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்

மின் கம்பங்களில் பணிபுரியும் லைன் மேன்களுக்கு ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கியுள்ளது மின்சார வரியம்.

தமிழகம் முழுவதும் காற்று மற்றும் மழை காலங்களில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்வதற்காக மின்சார வாரியா பணியாளர்கள் மின் மாற்றிகளில் ஏறி சரி செய்யும் போது எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட்டு ஆங்காங்கே உயிரிழப்புகள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. அதனை தடுக்கும் விதமாக நவீன கருவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மின் பகிர்மான கோட்டம் சார்பில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஓல்டேஜ் சென்சார் டிடெக்டிவ் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மின் மாற்றிகளில் மின் கசிவு இருக்கும் பட்சத்தில் இந்த கருவி சுமார் 3 மீட்டர் தொலைவிலேய ஒலி எழுப்பும். இதன் மூலம் பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டு அதற்கு தகுந்தபடி பணி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video Top Stories