Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்

சேலம் மாவட்டத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த கோவில் காளைக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி இறுதி மரியாதை செலுத்தினர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வெங்காயனூர் ஏரிக்கரை அருகே, செம்பு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் காரி இன காளை மாடு கோவில் சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. அதற்கு செம்பு மாரியப்பன் என பெயரிடப்பட்டது. பொங்கல் பண்டிகை, கரிநாள் அன்று மாரியப்பன் காளைக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் வஸ்திரம், மாலை ஆகியவற்றை கொண்டு முதல் மரியாதை செய்யப்பட்டு பூஜை நடத்துவது வழக்கம். 

அதேபோல் சுற்று வட்டார கிராமங்களில் கோவில் பண்டிகை காலத்தில் இந்த மாரியப்பனை அழைத்துச் சென்று முதல் மரியாதை செய்து வந்தனர். வயது முதுமை காரணமாக கோவில் காளை இறந்தது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று கூடி கோவில் காளைக்கு முறைப்படி நீராட்டி சந்தனம், மஞ்சள் நீர் தெளித்து வஸ்திரங்கள், மாலைகள் அணிவித்து தாரை தப்பட்டை அஞ்சலி செலுத்தினர். கோவில் அருகே அடக்கம் செய்தனர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Video Top Stories