அரசியல் கட்சி தொடங்கிய விஜய்; பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், ஆடு இலவசமாக வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், அதனை கொண்டாடும் விதமாக சேலத்தில் ஆயிரம் நபர்களுக்கு  அன்னதானமும், ஆடு, கோழி உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

Share this Video

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். கட்சியின் பெயரும் அறிவித்த நிலையில் இதனை தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே விஜய் ரசிகர்கள் விஜய் கட்சியின் அறிவிப்பு வெளியானதை வரவேற்று ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கோலகாலமாக கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து 1000 நபர்களுக்கு அன்னதானமும், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, துணி மற்றும் ஆடு, கோழி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அரசியல் கட்சி அறிவித்த சூழலில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Video