Asianet News TamilAsianet News Tamil

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பிரசாதன சாலையை ஆக்கிரமித்து அடாவடி செய்த விசிகவினர்; சேலத்தில் மக்கள் அவதி

சேலத்தில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் அடாவடி செய்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக மாற்றக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்பொழுது சுமார் 20 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி அடாவடியாக வாகனங்களை இயக்கினர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொண்டு எந்த ஒரு வாகனத்திற்கும் வழி விடாமல் அதிக ஒலி எழுப்பி அடாவடி செய்தனர். வெகு நேரம் நகராமல் அங்கே  இருந்த விசிக நிர்வாகிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இந்த செயல் அந்த வழியே சென்ற பொது மக்களுக்கு மிகவும் இடையூற ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories