Asianet News TamilAsianet News Tamil

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்

மேட்டூர் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமனின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோனூரைச் சேர்ந்த தம்பதியினர் செல்வகுமார் (வயது 45), ஸ்ரீதேவி (40). இவர்களது மூத்த மகள் அக்சிதாவுக்கு (13) மஞ்சள் நீராட்டு விழா அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மனைவியின் உடன் பிறந்த சகோதரர் அருன் பிரசாத் (35) தாய்மாமன் சீராக மேச்சேரியில் இருந்து சென்டை மேளங்கள் முழுங்க கண்டெய்னர் லாரியில் சீர்வரிசையாக 150 தட்டுகளில் கருப்பட்டி, பழங்கள், பூக்கள், பட்டுப் புடவைகள், பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள், ஆடைகள், வாழைத்தார்கள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட பொருட்கள் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.
 
மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் அழைத்து வரப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மேச்சேரியில் இருந்து கோனூர் வரை 10 கி.மீ, தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சீர்வரிசை சாலையில் சென்ற அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Video Top Stories