சேலம் டீக்கடையில் பள்ளி சிறுவர்கள் ஒய்யாரமாக புகை பிடிக்கும் காட்சி வைரல்

சேலம் மாவட்டத்தில் டீக்கடை ஒன்றில் பள்ளி சீருடையுடன் அமர்ந்து சிறுவர்கள் ஒய்யாரமாக புகைப்பிடிக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

First Published Mar 8, 2023, 3:56 PM IST | Last Updated Mar 8, 2023, 3:56 PM IST

சேலம் மாநகர் மரவனேரி அருகே உள்ள ஸ்ரீ சாய் காபி பார் என்ற டீக்கடையில் பள்ளி சீருடையுடன் வந்த மூன்று சிறுவர்கள் கடையில் சிகிரெட் வாங்கிக்கொண்டு கடைக்குள் அமர்ந்து ஒய்யாரமாக சிகிரெட் பிடித்தபடி கதை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள், சிகரெட், மதுபானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாது என அரசு விதிமுறை அமுலில் உள்ள நிலையில் இது போன்று சில கடைக்காரர்கள் தங்களது லாபத்திற்காக பள்ளி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கே புகையிலை போன்ற பொருட்களை விற்கக் கூடாது என்ற தடை உள்ள நிலையில், பள்ளி சீருடையில் வந்த சிறுவர்களுக்கு எப்படி சிகெரட் விற்கப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Video Top Stories