சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை துரிதமாக விரைந்து வந்து காப்பாற்றிய காவலர்

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்தவரை ரயில்வே காவலர் துரிதமாக மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Share this Video

சேலம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10.25 மணியளவில் கரூரைச் சேர்ந்த ரவிக்குமார் தனது மனைவியுடன் பெங்களூர்வில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் கரூர் செல்வதற்க்காக ஓடும் வண்டியில் S-7 பெட்டியில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரவிக்குமாரின் மனைவி கீழே விழுந்ததைப் பார்த்த கணவர் ரவிக்குமார் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். 

அப்போது தவறி நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடைவெளியில் விழுந்தவரை பாதுகாப்பு பணியில் இருந்த RPF காவலர் அஜித் துரிதமாக செயல்பட்டு எந்த காயமும் இல்லாமல் மீட்டார். தற்போது இதன் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Video