சேலத்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு; பயணிகளுடன் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பேருந்து

சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பேருந்து கவிழ்ந்து 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Share this Video

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து சுங்கச்சாவடி அருகே வந்த பொழுது ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பில் மோதி தலை கீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Video