சேலத்தில் வேளாண்மை துணை இயக்குனரை கண்டித்து பாமக எம்எல்ஏ அருள் போராட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வேளாண் துணை இயக்குனர் பேசிய ஆடியோ வெளியாகி இருந்தது.

First Published Nov 8, 2023, 5:04 PM IST | Last Updated Nov 8, 2023, 5:04 PM IST

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் விவசாயிகளை அனுமதிக்காமல் இடைத்தரகர்களை அனுமதிக்கும் அதிகாரியை கண்டித்தும், சர்வதிகார போக்குடன் செயல்படுவதுடன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள சேலம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) பாலசுப்பிரமணி மற்றும் அவருக்கு உதவியாக செயல்படும் பசுபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய கோரி உழவர் சந்தை முன்பு அமர்ந்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் அவருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ வெளியாகி இருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories