Video : திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள்.. அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம் - வைரல் வீடியோ

ஏற்காடு அருகே கொட்டச்சேடு பகுதியில் மலைவாழ் மக்கள் 3 மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.

First Published Jan 7, 2023, 8:26 PM IST | Last Updated Jan 7, 2023, 8:26 PM IST

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ளது கொட்டச்சேடு மலை கிராமம். இங்குள்ள மாரமங்கலம் பஞ்சாயத்தில் 18க்கும் மேற்பட்ட  மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். சாலை வேண்டும் என்று பல வருடங்களாக மலைவாழ் மக்கள் போராடி வருகிறார்கள்.

தற்போது உள்ள சாலையில் கொட்ட சேடு வர 25 கிலோமீட்டர் ஆகிறது. இணைப்பு சாலை அமைத்தால் 3 கிலோமீட்டர் தூரத்தில் கொட்டச்சேடு வந்து ஏற்காடு, சேலம் உள்ளிட்ட ஊருக்கு செல்ல முடியும் என மலை வாழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் கொட்டச்சேடு அருகில் உள்ள  நார்த்தன்சேடு என்ற பகுதிக்கு வந்து சாலையை அளவீடு செய்தனர்.

இதை அறிந்த மாரமங்கலம் பஞ்சாயத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இன்று காலை கொட்டச் சேடு பகுதிக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . தாங்கள் பல வருடமாக மேனாங்குழிகாடு என்ற பகுதியில் இருந்து சாலை அமைக்க வேண்டும் என கேட்டு வருகிறோம். ஆனால் அதிகாரிகள் நார்த்தன் சேடு என்ற பகுதியில் சாலை அமைக்க அளவீடு செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்காடு செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வந்த கார்களும் ஏற்காட்டுக்கு செல்ல முடியவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் மலைவாழ் மக்கள் சமாதானப்படுத்தினர் .வருவாய் துறை அதிகாரிகளும், மலைவாழ் மக்களை சமாதானப்படுத்தினர்.

இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!

இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!

Video Top Stories