Video: ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து நிலையத்திலேயே உயிரிழந்த மூதாட்டி

சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரின் கவனக் குறைவாள் மூதாட்டி ஒருவர் விபத்தில் சிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி ஒருவர் பேருந்தில் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த அரசு பேருந்து ஒன்று வேகமாக அதன் நடைபாதையில் நிறுத்துவதற்காக சென்றபோது ஓட்டுநரின் கவன குறைவால் மூதாட்டியின் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது மூதாட்டி மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video