நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மேடை ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அமைச்சர் நேரு

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மேடை ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

Share this Video

சேலம் மாநகரில் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 

இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவில் அமைச்சர் கே.என் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு மேடை ஏறும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தூக்கிவிட்டு பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

Related Video