அரசுப் பேருந்தில் தீ விபத்து; நடு ரோட்டில் அலறியடித்து ஓடிய பயணிகள் - சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Share this Video

சேலத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்து கருமத்தம்பட்டி தெக்கலூர் எலச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக பயணிகளை பேருந்தில் இருந்து இறங்குமாறு எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு விரைவாக கீழே இறங்கிய நிலையில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு அதிகாரிகள் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புகை கிளம்பியதும் சாதுர்தமாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டதால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாத்கிப்பும் ஏற்படவில்லை.

Related Video