சேலத்தில் அதிமுக உறுப்பினரை வீடு புகுந்து தாக்கிய திமுக பஞ்சாயத்து தலைவர்

சேலம் மாவட்டம் திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் தனது செல்போன் தொலைந்துவிட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதிமுக உறுப்பினரான அசோக்கை வீடு புகுந்து தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Mar 16, 2023, 11:47 AM IST | Last Updated Mar 16, 2023, 11:47 AM IST

சேலம் மாவட்டம் திருமலைகிரி பஞ்சாயத்து தலைவராக திமுகவின் மாணிக்கம் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இவரது செல்போன் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மைத்துனரும், அதிமுக உறுப்பினருமான குமார் மீது சந்தேகமடைந்த மாணிக்கம் அவரை வீடு புகுந்து கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories