சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த தொழிற்சங்க நிர்வாகிகளால் பரபரப்பு

சேலம் நகர பேருந்து நிலையத்தில் ஓட்டுநருக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

Share this Video

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் நகர பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பணிக்கு வந்த ஓட்டுநர், நடத்துனர்களிடம் பணியில் இருந்து செல்ல வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில் சேலம் மல்லூர் சென்று விட்டு சேலம் நகரப் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து ஓட்டுனரிடம் இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், ஓட்டுநருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Related Video