நிற்பதற்கு கூட நிதானம் இல்லை ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டும் போதை ஆசாமி

சேலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் மது போதையில் நிற்பதற்கு கூட நிதானம் இல்லாத சூழலில் ஆம்புலன்ஸ் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Oct 28, 2023, 12:54 PM IST | Last Updated Oct 28, 2023, 12:54 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனை முன்பும், தனியார் மருத்துவமனை முன்பும் பொதுமக்களின் உயிர்காக்கும் வாகனமாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாழப்பாடியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் சேலம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் மது போதையில் தள்ளாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொது மக்களை காக்க வேண்டிய உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசும் போக்குவரத்து ஆய்வாளர்களும் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மது போதையில் தள்ளாடும் இவர்கள் பொதுமக்களின் உயிரை எப்படி காப்பார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

Video Top Stories