சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

First Published Apr 14, 2023, 11:41 AM IST | Last Updated Apr 14, 2023, 11:41 AM IST

அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக அம்பேத்கர் உருவசிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேலம் அதிமுக மாநகர மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான ஒன்று திரண்டனர்.

பின்னர் அரசு கலைக்கல்லூரி சாலையிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் சேலத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமான திரண்டு வந்து பங்கேற்றனர்.

Video Top Stories