Watch : கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வந்த நடிகை 'மிர்னாளினி ரவி'- மாணவிகளுடன் ஆடல் பாடல் கொண்டாட்டம்!

கல்லூரி ஆண்டுவிழாவில் நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டு ஆடல் பாடல்களுடன் கொண்டாடினார். ஏராளமான மாணவ மாணவிகள் செல்பி எடுக்க வற்புறுத்தி சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

First Published Mar 25, 2023, 5:53 PM IST | Last Updated Mar 25, 2023, 5:53 PM IST

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் நடித்த எனிமி திரைப்பட டும் டும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாய் ஆடிப் பாடி மகிழ்ந்தார். தொடர்ந்து செல்பி எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது இதனை எடுத்து அந்த பகுதியில் இருந்து அவசர அவசரமாக நடிகை புறப்பட்டு சென்றார்.

Video Top Stories