Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்

சேலம் மாவட்டத்தில் வெல்டிங் பணியின் போது சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் தொழிலாளர்கள் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

First Published Jul 6, 2024, 4:37 PM IST | Last Updated Jul 6, 2024, 4:37 PM IST

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பால் கேன்கள் பழுதுகளை சிலிண்டர் மூலமாக வெல்டிங் வைக்கப்பட்டன. அப்போது திடீரென எதிர்பாராத விமாக சிலிண்டர் வெடித்துச் சிதறியது. சிலிண்டர் வெடித்த விபத்தில் ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் குமார் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சிலிண்டர் வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Video Top Stories