சுற்றுப்பயணத்தின் 2ஆம் நாள்: தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆளுநர் மலர் தூவியும் மரியாதை!!

பரமக்குடியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Share this Video

பரமக்குடியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதல்! - மருந்து தெளிக்க தாணியங்கி இயந்திரம் கண்டுபிடித்த விவசாயிகள்!

ராமநாதபுரம் மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதை அடுத்து சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று (18.04.2023) மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இதையும் படிங்க: கையை கட்டி குனிஞ்சு பேசனுமா? பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவன் ஆவேசம்

மேலும் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று (19.04.203) ஆளுநர் ஆர்.என்.ரவி பரமக்குடியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

Related Video