கையை கட்டி குனிஞ்சு பேசனுமா? பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவன் ஆவேசம்
வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கழக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எம்.பி.திருமாவளவன் ஆவேசமடைந்து பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எம்.பி. திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்லியில் மனித கழிவு கழக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. திமுகவுக்கு எதிராக விசிக மென்மையான போக்கை கடைபிடிக்கிறது போன்ற கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். இதனால் ஆவேசமடைந்த திருமாவளவன் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது வேங்கைவயல் விவகாரத்தில் அரசுக்கு உள்நோக்கம் இல்லை. திமுக அரசை எதிர்த்து 10 போராட்டங்கள் நடத்தியுள்ளேன். நாகரீகமாக பேச வேண்டும், உங்கள் கருத்தை திணிக்க கூடாது. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கை கட்டி குனிந்து பேச வேண்டுமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.