Watch : முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதல்! - மருந்து தெளிக்க தானியங்கி இயந்திரம் கண்டுபிடித்த விவசாயிகள்!
ஒட்டன்சத்திரம் அருகே முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளிக்க தானியங்கி இயந்திரம் ஒன்றை விவசாயிகளே கண்டுபிடித்து மருந்து தெளித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், பொருளுர், கப்பல்பட்டி, வாகரை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தக்காளி, முருங்கை, வெங்காயம், கடலை, மக்காசோளம், மிளகாய், கத்திரி உள்ளிட்ட விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
மரம் மற்றும் செடிகளில் பூச்சித் தாக்குதல் ஏற்படும் போது, கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு நபர் தனியாக பூச்சி மருந்தை எடுத்துக்கொண்டு உயரமான மரங்களில் மருந்து அடிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. மேலும் பெரிய பெரிய தோட்டங்களில் வாரக்கணக்கில் பூச்சி மருந்து தெளிக்க வேண்டி வருகிறது.
இந்நிலையில், கள்ளிமந்தையம் அருகே உள்ள கப்பல்பட்டியைச் சேர்ந்த செல்வபிரகாஷ், சவடமுத்து ஆகிய விவசாயிகள் தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்ரை கண்டு பிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை, சிறிய டிராக்டரில் பொறுத்தி பின்பகுதியில் பெரிய சின்டெக்ஸ் தொட்டி இணைத்து அதில் போதுமான மருந்து மற்றும் தண்ணீர் கலந்து வைத்துள்ளார்.
டிராக்டரில் 3 அடி ஒடைவெளியில் உள்ள மரங்களை சுற்றி வரும்போது தாணியங்கி மெசினின் இரு பக்கங்களில் உள்ள குழாய்களின் வழியாக மருந்துகள் சுற்றி சுற்றி சொட்டுநீர் பாசனம் போல பீய்ச்சி அடித்து தெளிக்கிறது.
4 ஏக்கர் நிலத்தில் உள்ள முருங்கை மரங்களுக்கு 1 மணி நேரத்தில் மருந்து தெளித்துவிடலாம். இதானல் நேரமும் மிச்சம், கூறி ஆட்கள் செலவும் மிச்சமாகிறது எனவும், இந்த தானியங்கி மெசினின் மூலம் 8 மணி நேரத்தில 30 ஏக்கர் வரை மருந்து தெளிக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.