எங்க முதலாளி தங்க முதலாளி.. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக புல்லட் பைக் வழங்கிய உரிமையாளர்..

கோத்தகிரி அருகே தீபாவளி போனஸாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளரால், மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தொழிலாளர்கள்.

First Published Nov 2, 2023, 11:16 AM IST | Last Updated Nov 2, 2023, 11:16 AM IST

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் உள்ள எஸ்டேட்டின் உரிமையாளர் தொழிலதிபர் சிவகுமார். இவர் தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கும் ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை இந்தத் தீபாவளி போனஸாக வழங்கி அசத்தியிருக்கிறார். இதில் டிரைவர் முதற்கொண்டு மேனேஜர் வரை எல்லோருக்குமே டூவீலர்களை போனஸாக வழங்கியிருக்கிறார். 

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார், கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் பரிசு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தனது கார் டிரைவர் முதல் எஸ்டேட் மேனேஜர் வரை 15 பணியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார். மேலும் அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்துகொண்டு, 15 வாகனங்களை புக் செய்திருக்கிறார். 15 பேரையும் அழைத்து, வாகனத்தின் சாவியைக் கையில் கொடுத்திருக்கிறார். சற்றும் எதிர்பாராத பணியாளர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!

Video Top Stories