கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!
லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே மட்டுமின்றி, தமிழ் சினிமா வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
Leo Success Meet
நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், ஜனனி என லியோ படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
Thalapathy Vijay
விழா அரங்கில் நடிகர் விஜய் கையசைத்து நடந்து வரும்போது மொத்த அரங்கமே கரவொலி எழுப்பியது. இந்த விழா தொடங்குவதற்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய மேயாத மான் பட இயக்குனரும், லியோ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
Rajinikanth
இதற்கு முன்னதாக ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காகம் - கழுகு கதை ஒன்றை சொன்னார். இது விஜயை தான் மறைமுகமாக தாக்கினார் என்றும் கூறப்பட்டது. ரஜினி பேசிய போது, என்னதான் காகம் தொந்தரவு செய்தாலும் கழுகு அமைதியாக தான் இருக்கும். ஆனால் கழுகு பறக்கும் உயரத்துக்கு என்ன முயற்சித்தாலும் காகம் பறக்காது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Rathnakumar
அப்படி வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்” என்று கூறினார். இந்த நிலையில் லியோ பட வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், “எத்தனை பேர் இருந்தாலும் என் போகஸ் விஜய் சார் மேலதான் இருக்கும். எனக்கு சினிமா ஆசை வர்றதுக்கு முக்கியக் காரணம் அவர்தான்.
Director Rathnakumar
பத்திரிகையில் எல்லாம் இவர் முகத்தைப் போடமாட்டோம்ன்னு சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னைக்கு மாஸ் காட்ட அவரோட ஒரு புகைப்படம் இருந்தால் போதும். மாஸ்டர் படத்தில் கதைக்காக வாத்தி ரைடு பாடலை எழுதினோம். அதன் பிறகு ஐடி ரைடு வந்துது. லியோவில் நான் ரெடிதான் என்று எழுதினோம், அது எதுக்கு என்று இப்போ உங்களுக்கே தெரியும் என்று கூற, அரங்கில் கைதட்டல்கள், விசில்கள் பறந்தது.
Rathnakumar About Rajini
தொடர்ந்து பேசிய ரத்னகுமார், விஜய் சார் கூட ரெண்டு படம் பண்ணிட்டேன். அவர்கிட்ட பேசும்போது யாரையும் நிக்க வைக்க மாட்டார். உடனே சேர் எடுத்துட்டு வரச் சொல்லுவார். அவரைப் பொருத்தவரை சின்னவங்க, பெரியவங்க என்றெல்லாம் கிடையாது. எல்லோரையும் சமமாத்தான் நடத்துவார்.
Rathnakumar About Vijay
எவ்வளவு உயரத்துல பறந்தாலும் பசிச்சா கீழதானே வரனும்” என்று கூற அரங்கில் மீண்டும் கரவொலிகள் பறந்தது. இயக்குனர் ரத்னகுமாரின் இந்த சர்ச்சை பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. அதேபோல விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.