மத்திய அரசை போல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடாது - மதுரையில் கனிமொழி பேட்டி

மத்திய பாஜக அரசை போன்று பழிவாங்குவதற்கோ, அச்சுறுத்துவதற்கோ அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்படவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என எம்.பி.கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

First Published Dec 2, 2023, 3:59 PM IST | Last Updated Dec 2, 2023, 4:00 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிர் அணி செயலாளரும், எம் பியுமான கனிமொழி பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்துள்ளனர். 

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். ஒன்றிய அரசு போல, பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி, நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் யாரையும் மிரட்டுவதற்காக செய்துவிட்டு பாதியில் நிறுத்தப் போவதில்லை. மேலும்பாஜக மீது, பாஜக நிர்வாகிகள் மீது சிஏஜி அறிக்கையில் முன்வைத்த பல்வேறு  குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.