தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.. ஜாக்டோ ஜியோ கோரிக்கை !!

மதுரையில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவிலான மாநாடு நடைபெற்றது.

Share this Video

ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான மாநாடு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உயர்மட்ட குழு உறுப்பினர்கள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத்தொகை, சரண்டரை வழங்கிட வேண்டும், அரசாணை 115, 152 மற்றும் 139 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உள்ளிட்ட தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்பணியாளராக அறிவிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகைகளை வலியுறுத்தி 5 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Palani : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் !!

இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

Related Video