Palani : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் !!

பழனியில் தைப்பூசத் திருவிழாவை தொடர்ந்து பாதயாத்திரையாக பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

First Published Feb 12, 2023, 4:50 PM IST | Last Updated Feb 12, 2023, 4:50 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 29 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா துவங்கி நடைபெற்று நிறைவடைந்தது‌. தைப்பூசத்தை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் தற்போது தைப்பூசத் திருவிழா நிறைவடைந்துள்ள நிலையில் எடப்பாடியில் இருந்து பாதயாத்திரையாக வழக்கமாக வரும் பருவத ராஜகுல சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பழனியில் குவிந்துள்ளனர்.

363வது ஆண்டாக பாதயாத்திரை வரும் எடப்பாடி பக்தர்கள்  கடந்த பிப்ரவரி 3ம்தேதி எடப்பாடியில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு பழனி கோவிலில் தங்கி இன்று காலை  சாமிதரிசனம் செய்து வருகின்றனர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பருவத ராஜகுல சமூகத்தினர் பழனியில் குவிந்துள்ளனர். மேலும் 17ஆயிரம் கிலோ அளவிற்கு பஞ்சாமிர்தம் கரைத்து பிரசாதங்களை பகிர்ந்து கொண்டு இன்று மாலை மீண்டும் எடப்பாடிக்கு திரும்பிசெல்வார்கள்.

எடப்பாடி பக்பர்கள் வருகையை ஒட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எடப்பாடி பக்தர்கள் மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளதால், நீண்ட நேரம் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

Video Top Stories