‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது புஷ்பா திரைப்படம்.
புஷ்பா படத்தின் மிகப்பெரிய ஓபனிங்குக்கு ஊ சொல்றியா மாமா பாடலும் காரணம். ஆண்ட்ரியாவின் குரலும், சமந்தாவின் கவர்ச்சியான நடனமும் ரசிகர்களை சொக்க வைத்தது என்றே கூறலாம். இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை மட்டுமல்ல, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை, செல்லூர் அய்யனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அஜ்மீர் காஜா என்பவரது மகனாகிய முகம்மது சலீம் என்ற இளைஞர் கடந்த ஓராண்டுக்கு முன்பாக அண்ணா பேருந்து நிலைய பகுதி வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே
சில மாதங்களுக்கு முன்பு முகம்மது சலீம் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முகம்மது சலீம் ஏற்கனவே வேலை செய்த உணவகத்திற்கு இன்று மீண்டும் வந்த நிலையில் உணவகத்தின் அருகே மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முகம்மது அபி என்பவருக்கு சொந்தமான செல்போன் கடைக்கு சென்று அங்குள்ள ஊழியரிடம் பேசி கொண்டிருந்துள்ளார்.
அப்போது செல்போன் கடையில் ஊ சொல்றியா பாட்டு பாடிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த சலீம் குத்து பாடலுக்கு சவுண்டு வைக்க வேண்டும் நான் டான்ஸ் ஆடனும் என செல்லும் கடை ஊழியரிடம் கூறியுள்ளார். அதற்கு ஊழியர் முடியாத என்று கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுப்பாகி டென்ஷனான முகம்மது சலீம் உன் கடையில் பெட்ரோல் குண்டு போடுறேன் என கூறிவிட்டு, சிறிது நேரத்தில் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். இப்போது பாட்டு சவுண்டு வை இல்லையென்றால் பெட்ரோல் குண்டு வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் செல்லும் கடை ஊழியர் இங்கிருந்து போ என சலீமிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க..சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!
இதனையடுத்து சில நொடிகளிலயே கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அருகில் இருந்த உணவகத்தில் அடுப்பில் பற்றவைத்த சலீம் பெட்ரோல் குண்டை செல்போன் கடை மீது தூக்கி எறிய பெட்ரோல் குண்டுவெடித்து கடையில் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. கடைக்குள் பெட்ரோல் குண்டு விழுகாத நிலையில் அங்குள்ள ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.
உடனடியாக செல்போன் கடை ஊழியர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுபோதையில் செல்போன் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சலீமை கைது செய்த காவல்துறையினர் 4பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்..! மாணவிகளுக்கு ஸ்கூட்டர்.! திரிபுரா தேர்தல் - இலவசங்களை அள்ளி வீசிய பாஜக !!