இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்..! மாணவிகளுக்கு ஸ்கூட்டர்.! திரிபுரா தேர்தல் - இலவசங்களை அள்ளி வீசிய பாஜக !!

இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் ,கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர்,மலிவு விலை உணவகம் என்று திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

Tripura election 2023: BJP manifesto promises smartphones and scooters for students

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு வரும் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றது.

மேலும், திரிபுராவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அகன்ற திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைக்கும் திப்ரா மோதா தலைமையிலான கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Tripura election 2023: BJP manifesto promises smartphones and scooters for students

இதையும் படிங்க..வாரிசை சந்தித்த வாரிசு..! முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்த ஆதித்யா தாக்கரே - 2024 தேர்தல் முன்னோட்டமா.?

பாஜக தேர்தல் அறிக்கையை அதன் தேசிய தலைவர் ஜே.பி நட்டா அகர்தலாவில் வெளியிட்டார். கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர், இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் என்று இலவசங்களை வாரி இரைத்துள்ளது பாஜக. பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரத்துக்கு பத்திரம் வழங்கப்படும்.

கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி தரப்படும். பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் 2 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்து நிலமற்ற குடிமக்களுக்கும் நிலப்பட்டா விநியோகிக்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 2025-க்குள் வீடு கட்டித் தரப்படும்.

Tripura election 2023: BJP manifesto promises smartphones and scooters for students

5 ரூபாய்க்கு மூன்று வேளை சமைத்த உணவு வழங்க கேன்டீன்கள் திறக்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் 50 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று இலவசங்களை அள்ளி தெளித்துள்ளார்கள் பாஜகவினர்.

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேசிய ஜே.பி நட்டா, பாஜக  வெளியிடும் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம் மட்டும் அல்ல. அது மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகும். திரிபுராவில் முந்தைய காலக்கட்டத்தில் பிரச்னைகள் நிறைந்து காணப்பட்டது. பாஜக ஆட்சியின் போது அமைதியாகவும், வளர்ச்சி அடைந்தும் காணப்பட்டது. நாங்கள் சொல்வதை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.

இதையும் படிங்க..சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios