வாரிசை சந்தித்த வாரிசு..! முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்த ஆதித்யா தாக்கரே - 2024 தேர்தல் முன்னோட்டமா.?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே இன்று சந்தித்தார்.
மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே. இவர், சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரேவின் பேரன். இவர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சந்திப்பு இன்று நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ஆதித்யா தாக்கரேவுக்கு பரிசாக அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல பால் தாக்கரேவும், கலைஞர் கருணாநிதியும் இருக்கும் புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதித்யா தாக்கரே பரிசாக அளித்தார்.
அப்போது அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அருகில் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. வரப்போகின்ற 2024 தேர்தலுக்கு பாஜக அரசுக்கான பலமான எதிர்கூட்டணியை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே
இதையும் படிங்க..சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!