திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க - வாழ்த்து கூறிய ஓ.பன்னீர்செல்வம்

மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தவறுதலாக தெரிவித்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Share this Video

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன் தவறுதலாக மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என ஆவேசமாக பேசினார். அப்போது உடன் இருந்த தொண்டர்கள் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய கருத்தை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறிவிட்டு கடந்து சென்றார்.

Related Video