Asianet News TamilAsianet News Tamil

வாட்டி வதைக்கும் கோடை வெயில்… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!!

பள்ளி, கல்லூர் விடுமுறை மற்றும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூர் விடுமுறை மற்றும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கல் அதிகமாக உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழை - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!!

அந்த வகையில் பள்ளி, கல்லூரி, விடுமுறையை, கொண்டாடவும் ,அதிக வெப்பத்தை தவிர்க்கவும், கொடைக்கானலை, நோக்கி சுற்றுலா பயணிகள், தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று  அழைக்கப்படும், கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் அங்குள்ள சுற்றுள்ளலாத் தலங்கள், அனைத்தும் மக்கள் கூட்டம் நிரம்பியது.

இதையும் படிங்க: அரசமரத்தில் தோன்றிய விநாயகர் கண்கள் - திருச்சி அருகே கோவிலில் வினோத சம்பவம்

மேலும் அங்குள்ள பூங்கா ஒன்றில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரிய வகை பூக்கள் மற்றும் தாவரங்கள் இருந்தன. இவை அனைத்து சுற்றுலா பயணிகளை, அதிக அளவில் கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் ஏரி சாலையை சுற்றி கடை வைத்துள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Video Top Stories