WATCH : கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழை - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!!

கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share this Video

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரம் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் கொடைக்கானலில் நிலவிய வறண்ட சூழல் மாறியது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த பல நாட்களாக கொடைக்கானலில் மழை பெய்யாமல் வறண்ட சூழல் நிலவி இருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அருவிகள் நீரின்றி இருந்தது. தற்போது பெய்த இந்த கோடை மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி கருமை நிறத்தில் மழை நீர் கொட்டியது. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும், தற்போது பெய்த கோடை மழை காரணமாக கொடைக்கானலில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது. கொடைக்கானலில் கொட்டிய திடீர் மழை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

Related Video