WATCH : அரசமரத்தில் தோன்றிய விநாயகர் கண்கள் - திருச்சி அருகே கோவிலில் வினோத சம்பவம்

திருச்சி அருகே கோயிலில் உள்ள அரசமரத்தில் விநாயகர் கண்கள் இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள் பொதுமக்கள்.

First Published Apr 23, 2023, 10:50 AM IST | Last Updated Apr 23, 2023, 10:50 AM IST

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி.மேட்டூர் கிராமத்தில் ஐயாற்று கரையில் உள்ள வேப்ப மரத்து அடியில் விநாயகர் கோவில் உள்ளது அங்குள்ள அரசமர கிளை ஒன்றில் விநாயகர் கண்கள் தெரிவதாக தகவல் பரவியதை அடுத்து பி.மேட்டூர், கல்லாங்குத்து கோம்பை, பச்சைபெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்  அதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 

அரச மர கிளையில் இரு கண்களில் ஒரு கண் முழுவதுமாக திறந்தபடியும் மற்றொரு கண் மூடிய படியும் தெரிந்ததால் விநாயகர் தெரிவதாகவும் அது தெய்வ சக்தியின் வழிபாடு எனவும் கூடியிருந்த பொதுமக்கள் வணங்கிச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இதைப் பார்த்த சுற்று வட்டார கிராம பொதுமக்கள் அதை மொபைல் போனில் செல்பி எடுத்துச் சென்றனர். இந்த் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!

Video Top Stories