Asianet News TamilAsianet News Tamil

லேடி சூப்பர் ஸ்டாராக கோவையை கலக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்

கோவையில் முதல் முறையாக பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பெண்ணியவாதிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை காந்திபுரம், சோமனூர் வழியில் தனியார் பேருந்தை ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.  பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத் தான் நகர்கின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

ஆட்டோ ஓட்டுநரான தந்தை மகேஷ் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டிப் பழகி தனது தந்கை்கு உறுதுணையாக இருந்துள்ளார். பின்னர் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்று உள்ளார். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்கிறார், ஷர்மிளா. 

வாந்தி எடுத்த போது சாக்கடையில் தவறி விழுந்த கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு

7 ம் வகுப்பு படிக்கும் போது தனக்கு வாகனம்  ஓட்ட ஆர்வம் வந்ததாகக் கூறும் ஷர்மிளாவை குடும்பத்தினரோ உனக்கு எதில் விருப்பம் அதிகமோ அதையே செய் என்று சுதந்திம் அளித்துள்ளனர். அதன்படி இப்போது பேருந்தை ஓட்டத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்து உள்ளதாகவும் தான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம் எனக் கூறும் ஷர்மிளா, "நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு; கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன்" என ஊக்கப்படுத்தி உள்ளார்.

பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்த போது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கி விட்டார் அவர்.

Video Top Stories