குண்டு கட்டாக தூக்கிட்டு போறத பாத்துருப்போம், இது என்ன கூண்டு கட்டி தூக்கிட்டு போறாங்க; வைரல் வீடியோ

கோவை மாவட்டம் ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்ட சிறிய ரக கூண்டிற்குள் குழந்தை ஒன்றை அமர வைத்தபடி இருவர் சென்றது சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தது.

Share this Video

கோவை மாவட்டம் ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்க, வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அவ்வழியே நான்கு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையிலான பயணம் இது. குழந்தைகளை சற்று கூடுதல் கவனத்துடன் கண்பார்வையில் வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Video